ரூ. 10 லட்சம் செலவில் உருவான யாழ் படத்தின் டைட்டில் பாடல்!

Bookmark and Share

ரூ. 10 லட்சம் செலவில் உருவான யாழ் படத்தின் டைட்டில் பாடல்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த யாழ் பாணர்களின் வாரிசுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் யாழ்.

நாடோடிகளாக ஊர் ஊராக சென்று யாழ் இசைக்கருவியைக்கொண்டு டான்ஸ்- ட்ராமா நடத்தி வந்த யாழ் பாணர்கள் சமுதாயத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை இசை நடனங்கள் மூலமாக மக்களுக்கு உணர்த்தி வந்தனர். அந்த யாழ் இசைக்கலைஞர்களான பாணர்களின் பெயரில்தான் இலங்கையில் யாழ்ப்பாணம் என்ற பகுதி உருவானது.

அந்த வகையில், தற்போது யாழ் என்ற பெயரில் உருவாகியிருக்கும் படம் யாழ் பாணர்களின் வாரிசுகளின் மூன்றுவிதமான பிரச்சினைகளின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது.

முக்கியமாக யாழ் பாணர்கள் சமூகத்துக்கு சொன்ன தத்துவங்களும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதோடு, யாழ் பாணர் காலத்து படங்களை சிஜி ஒர்க் மூலம் படத்தின் டைட்டில் பாடலில் இணைத்திருப்பதாக சொல்கிறார் படத்தின் இயக்குனர் ஆனந்த்.

அந்த வகையில், யாழ் பாணர்களின் பண்டைகால வாழ்க்கையும், அவர்கள் சொன்ன வாழ்க்கை முறைகளும் இன்றைய ரசிகர்களுக்கு புதிய அனுபவமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூறும் டைரக்டர் ஆனந்த், சிவாயநமஹ என்று தொடங்கும் யாழ் படத்தின் டைட்டில் பாடலை யூ டியூப்பில் இதுவரை 2 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்து லைக் செய்திருப்பதாக சொல்கிறார்.

மேலும், இந்த பாடலில் யாழ் பாணர்கள் சம்பந்தப்பட்ட படங்களை சிஜி மூலம் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions