யாகாவாராயினும் தமிழ் காக்க!

Bookmark and Share

யாகாவாராயினும் தமிழ் காக்க!

சினிமாவில் பல காட்சிகளில் கொலைகள் செய்வது இப்போது சகஜமாகி விட்டது. அதே போல தமிழ்க் கொலை செய்வதும் வாடிக்கையாகித் தொடர்கிறது. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாயிற்றே அதில் தவறு செய்யக் கூடாது என்று நினைப்பதே இல்லை. டைட்டில் கார்டில் வரும் பெயர்களில் தப்பும் தவறுமாக எழுத்துகளைப் போடுகிறார்கள்.

பல படங்களில் பின்னணி என்பதற்குப் பதிலாக பின்னனி என்றே தவறாக வரும் யாகாவாராயினும் நாகாக்க என்று ஒரு படம் வந்துள்ளது. பரவாயில்லையே நல்ல தமிழில் தலைப்பு உள்ளதே என்று நினைத்தோம் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்கிற குறளின் அடிப்படையிலான கதை. இக்குறளின் பொருள் என்ன தெரியுமா?

தம்மால் காக்கப் பட வேண்டிய எல்லாவற்றையும் காக்க முடியாவிட்டாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்க இல்லையெனில் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர் என்பது பொருள்.

நாக்கு தடித்து பேசும் தவறான ஒரு சொல்லால் சிக்கலில் மாட்டி துன்புறும் இளைஞர்கள் பற்றியதுதான் இப்படத்தின் கதையே. தலைப்புக்கேற்ற நல்லதொரு கதையை ஒரு முழுப் படமாக இரண்டரை மணி நேரம் சொல்லி இறுதியில் அந்தக் குறளைக் கொட்டை எழுத்துகளில் போடுகிறார்கள். யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு என்று.

சொல்லிழுக்குப் பட்டு என்பதற்குப் பதிலாக சொல்லிழுக்கப் பட்டு என்று வருகிறது. இந்தத் தமிழ்க் கொலையைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு சுருக்கென்று வலிக்கிறது. யார் கவனிப்பது? பல பேருந்துகளில் கூட இப்படித்தான் தவறாகவே உள்ளது.

படமெடுத்தவர்கள் முழுக்க முழுக்கத் தெலுங்கு மொழிபேசுபவர்கள் என்றாலும் தமிழ் சார்ந்த பொறுப்பாளர்கள் இதைக் கவனிக்க வில்லையா? படங்களில் யாகாவாராயினும் தமிழ் காக்க என்பது இவர்களுக்கு எப்போது புரியும்?


Post your comment





Related News
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions