தமிழ்ப்படம் தயாரிக்கும் கேரள விநியோகஸ்தர்கள்!

Bookmark and Share

தமிழ்ப்படம் தயாரிக்கும் கேரள விநியோகஸ்தர்கள்!

தமிழ்ப்படங்களை கேரளத்தில் வெளியிடும் விநியோகஸ்தர்கள், தமிழ்ப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டுவது அதிகரித்து வருகிறது. விஜய் நடித்த படங்களை கேரளாவில் வெளியிடும் தமீம் என்பவர்தான் தற்போது விஜய்யை வைத்து புலி படத்தைத் தயாரித்து வருகிறார். அவரைப்போலவே இன்னுமொரு கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தரும் தயாரிப்பாளராகி இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தை குளோபல் யுனைடெட் மீடியா என்ற நிறுவனம்தான் கேரளா முழுக்க வெளியிட்டது.

பொதுவாகவே ஐ படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை என்று சொல்லப்பட்டநிலையில், கேரளாவில் மட்டும் மிகப்பெரிய வசூலைக் கொடுத்தது ஐ படம்.
அதில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, குளோபல் யுனைடெட் மீடியா படத் தயாரிப்பில் காலடி வைத்திருக்கிறது.

முதல்முயற்சியாக, மிருகம், ஈரம், அரவான் ஆகிய படங்களில் குறிப்பிடும்படியான அளவுக்கு சிறப்பாக நடித்த ஆதியின் நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் யாகாவாராயினும் நா காக்க படத்தை வாங்கி வெளியிடுகிறது.  இந்தப் படத்தை ஆதர்ஷ சித்ராலயா நிறுவனம் சார்பில் தயாரித்திருப்பவர் ஆதியின் தந்தை ரவிராஜா பின்னி ஷெட்டி! இவர் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைத்து 60-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்! 

யாகாவாராயினும் நா காக்க படத்தை இயக்கியிருப்பவர் சத்ய பிரபாஸ். இவர் ரவிராஜா பின்னி ஷெட்டியின் மூத்த மகன், ஹீரோ ஆதியின் அண்ணன்! 

அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஒரு திரைப்பட கல்லூரியில் இயக்கம் குறித்த படிப்பை முடுத்துவிட்டு வந்து முதன் முதலாக இயக்கியிருக்கும் படம் இது.

யாகாவாராயினும் நா காக்க படத்தை அடுத்து முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்.

இந்நிறுவனத்தின் சிஇஓ ஆக தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான கேயார் பதவி ஏற்றுள்ளார்.


Post your comment





Related News
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions