யாக்கை படப்பிடிப்பு நிறைவடைந்தது

Bookmark and Share

யாக்கை படப்பிடிப்பு நிறைவடைந்தது

யட்சன் படத்திற்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம் யாக்கை. அவருக்கு ஜோடியாக சுப்பிரமணியபுரம் ஸ்வாதி நடிக்கிறார். ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய டி.குழந்தை வேலப்பன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இதன் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது.

நீ என்று தொடங்கும் இந்தப் போடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது படபப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிறகான டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது."இது ஒரு அழகான காதல் கதை. படம் வெளிவந்த பிறகு கதிர், கவிதா கேரக்டர்கள் பேசப்படும்.

அந்த அளவிற்கு இதில் காதலை அழத்தமாகவும், யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறோம். பிரகாஷ்ராஜ் இதுவரை ஏற்றிராத முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். சிங்கம்புலியும், எம்.எஸ்.பாஸ்கரும் கதையுடன் இணைந்து காமெடி செய்கிறார்கள்.

உலகில் காதலிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. எல்லோருக்குள்ளும் காதல் வந்து போயிருக்கும். அதை படம்பிடித்து காட்டியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் குழந்தை வேலப்பன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions