முற்றிலும் மாறுபட்ட அரசியல் கதை `எமன்'

Bookmark and Share

முற்றிலும் மாறுபட்ட அரசியல் கதை `எமன்'

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக  விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார்.

`நான்' படத்திற்கு பின்னர் ஜீவா சங்கர் மீண்டும் விஜய்  ஆண்டனியை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய  கதாபாத்திரத்தில் தியாகராஜன், சங்கிலி முருகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில்,  `எமன்' படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஜீவா சங்கர் பகிர்ந்துள்ளார். 

`எமன்' முழுக்க முழுக்க அரசியல் சாயலில் எடுக்கப்படும் கதை. இப்படத்தில் அரசியல்வாதியாக மிரட்டும் தியாகராஜனால்  பாதிக்கப்படும் விஜய் ஆண்டனி, அவரது வழியிலேயே அரசியலில் நுழைந்து, தியாகராஜனின் செல்வாக்கை அடியோடு அழிப்பது  குறித்த வித்தியாசமான கதை.

பொதுவாகவே அரசியல் கதைகள் என்றாலே, பொதுமக்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள்  என்று என்ற சாயலில் இருக்கும். ஆனால் `எமன்' முற்றிலும் மாறாக அரசியல்வாதிகள், அரசியலை எப்படி பார்க்கிறார்கள் என்ற  புதிய சாயலில் இருக்கும் என்று ஜீவா சங்கர் கூறுகிறார்.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions