'யாருடா மகேஷ்' படத்தின் ஹீரோவின் அடுத்தப்படம்

Bookmark and Share

'யாருடா மகேஷ்' படத்தின் ஹீரோவின் அடுத்தப்படம்

'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்'  என்ற பட நிறுவனம் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து  'மாயா' என்ற படத்தை தயாரித்து வருகிறது  இந்த ஹாரர் படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

'நெடுஞ்சாலை' படத்தில் நடித்த ஆரியும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.  ஆரி ஹீரோவாக நடித்தாலும் மாயா படத்தைப்பொருத்தவரை முழுக்க முழுக்க நயன்தாராவை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். ரான் யோஹன் இசையமைக்கிறார். மாயா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்திலிருக்கின்றன.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பள்ளிவிடுமுறையை கருத்தில் கொண்டு 'மாயா' படத்தின் ரிலீஸ் தேதியை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி.

மாயா படத்தின் ரிலீஸ் வேலைகள் நடக்கும் அதேநேரம்,  'பொட்டென்ஷியல் ஸ்டியோஸ்' நிறுவனம் தனது அடுத்த படத்தையும் சத்தமில்லாமல் துவங்கியுள்ளது. 'யாருடா மகேஷ்' படத்தின் ஹீரோ சந்தீப் கிஷான் இப்படத்தில் தான் நாயகனாக நடிக்கிறார்.

'டார்க் காமெடி' ரகத்தைச் சேர்ந்த கதையாம். லோகேஷ் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார்.  இவர் குறும்பட ஒரு இயக்குனர்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions