ஏப்ரலில் 'யட்சன்' இசை வெளியீடு

Bookmark and Share

ஏப்ரலில் 'யட்சன்' இசை வெளியீடு

அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தை இயக்கியதற்குப் பின் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் படம் 'யட்சன்'. ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, சுவாதி மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பமானது.

ஒரு வருடமாக நடந்து வந்த படப்பிடிப்பு இந்த மாதக் கடைசியுடன் முடிவடைய உள்ளதாம். அடுத்த மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டை நடத்த உள்ளார்கள். விஷ்ணுவர்தன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவர உள்ள எட்டாவது திரைப்படம் இது. இவர்களிருவரும் இதுவரை இணைந்த படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி பேசப்படக் கூடியவையாகவே அமைவது வழக்கம்.

அது இந்தப் படத்திலும் தொடர்கிறது என்கிறார்கள். எழுத்தாளர்களான சுபா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்திற்கு அவர்களே வசனம் எழுதுகிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் படங்களாகவே இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய தம்பி கிருஷ்ணாவை மேலும் முன்னணிக்கு கொண்டு வரும் விதத்தில் இரண்டு நாயர்களில் ஒருவராக நடிக்க வைத்துள்ளார்.

ஆர்யாவும் பெரிய மனது பண்ணி அதற்கு சம்மதித்திருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கிய 'அறிந்தும் அறியாமலும்' படம் ஆர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இவர்களிருவரும் இணைந்து 'அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம்' ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்கள். 'யட்சன்' படம் கோடை விடுமுறையில் வெளியாகும் எனத் தெரிகிறது.


Post your comment





Related News
யட்சன் இசைவெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா?
யட்சன் படம் தள்ளி வைப்பு ஏன்?
ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் யட்சன்
யட்சனில் அரசியல்வாதியாக நடிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்
அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா
யட்சன் படத்தில் கௌரவ வேடத்தில் அஜித்..! உண்மையா..வதந்தியா?
யட்சனில் கௌரவ வேடத்தில் தோன்றும் எஸ்.ஜே.சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions