யட்சன் படம் தள்ளி வைப்பு ஏன்?

Bookmark and Share

யட்சன் படம் தள்ளி வைப்பு ஏன்?

யுடிவி தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் யட்சன். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்தப் படம் முடிவடைந்து பல மாதங்களாகின்றன.இதே யுடிவி நிறுவனம் தயாரித்த புறம்போக்கு படத்திலும் ஆர்யா நடித்திருந்தார்.

எனவே முதலில் புறம்போக்கு படத்தை வெளியிட்டுவிட்டு பிறகு யட்சன் படத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டு யுடிவி நிறுவனம் பட வேலைகளை மேற்கொண்டது.

அதன்படி சில மாதங்களுக்கு முன் புறம்போக்கு படத்தை வெளியிட்டுவிட்டது.அதையடுத்து யட்சன் படத்தை வெளியிடும் வேலைகளில் ஈடுபட்டபோது, யட்சன் படத்தை இப்போது வெளியிட வேண்டாம் என ஆர்யா தரப்பிலிருந்து யுடிவிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. தான் தயாரிக்கும் வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படம் முதலில் ரிலீஸ் ஆக வேண்டும்.

அதன் பிறகு யட்சன் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று ஆர்யா கேட்டுக் கொண்டாராம். யுடிவி தனஞ்செயனுக்கு ஆர்யா நெருங்கிய நண்பர் என்பதால், அவரது வேண்டுகோளை ஏற்று யட்சன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டாராம் தனஞ்செயன்.

இதனால் யட்சன் படத்தின் இயக்குநரான விஷ்ணுவர்தன் ஆர்யா மீது செம கடுப்பாகிவிட்டாராம்.இயக்குநர் விஷ்ணுவர்தனும், ஆர்யாவும் வாடா போடா நண்பர்கள். விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் தற்போது யட்சன் என அனைத்து படங்களிலும் ஆர்யா நடித்திருக்கிறாராம்.

ஆனாலும் தன்னுடைய தயாரிப்பில் வெளிவரும் வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்காக யட்சன் படத்தை தள்ளி வைக்க சொன்னதால் ஆர்யா உடனான நட்பு சேதாரமாகி விட்டதாம்.


Post your comment





Related News
யட்சன் இசைவெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா?
ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் யட்சன்
ஏப்ரலில் \'யட்சன்\' இசை வெளியீடு
யட்சனில் அரசியல்வாதியாக நடிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்
அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா
யட்சன் படத்தில் கௌரவ வேடத்தில் அஜித்..! உண்மையா..வதந்தியா?
யட்சனில் கௌரவ வேடத்தில் தோன்றும் எஸ்.ஜே.சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions