யட்சன் இசைவெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா?

Bookmark and Share

யட்சன் இசைவெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா?

கும்மாளம் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி  அறிந்தும் அறியாமலும் பட்டியல்  சர்வம் பில்லா ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி ஆகியோரை வைத்து விஷ்ணுவர்தன் தற்போது இயக்கி வரும் படம் - யட்சன்.

இரட்டை எழுத்தாளர்களான சுபா பிரபல பத்திரிகை ஒன்றில் எழுதிய தொடர்கதையையே படமாக்கி உள்ளார் விஷ்ணுவர்தன். இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது.

யட்சன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. கும்மாளம் படம் தொடங்கி விஷ்ணுவர்தன் இயக்கிய அனைத்து படங்களுக்குமே  யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர்.

இதற்கு யட்சன் படமும் விதிவிலக்கில்லை. இவர்கள் இருவரும் இணைந்த அறிந்தும் அறியாமலும் பில்லா சர்வம் ஆரம்பம் உட்பட அனைத்து படங்களின் பாடல்களும் ஹிட்டாகி உள்ளன.

அந்த வரிசையில் யட்சன் படப் பாடல்களையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துவரும்நிலையில், யட்சன் படப் பாடல்களை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி புலி படத்தின் இசைவெளியீடு நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாளே யட்சன் இசைவெளியீட்டையும் நடத்தினால் எடுபடாமல் போய்விடுமோ என தயாரிப்பாளர் தரப்பில் தயக்கமும் நிலவுவதாக சொல்லப்படுகிறது. யட்சன் இசைவெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா? பார்ப்போம்..!


Post your comment





Related News
யட்சன் படம் தள்ளி வைப்பு ஏன்?
ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் யட்சன்
ஏப்ரலில் \'யட்சன்\' இசை வெளியீடு
யட்சனில் அரசியல்வாதியாக நடிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன்
அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா
யட்சன் படத்தில் கௌரவ வேடத்தில் அஜித்..! உண்மையா..வதந்தியா?
யட்சனில் கௌரவ வேடத்தில் தோன்றும் எஸ்.ஜே.சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions