இலங்கையின் அழகை சொல்லும் யாழ்!

Bookmark and Share

இலங்கையின் அழகை சொல்லும் யாழ்!

இலங்கை தமிழர்கள் சம்பந்தப்பட்ட கதையில் பல படங்கள் வந்திருந்தபோதும், அவையெல்லாம் அங்குள்ள தமிழர்களின் பிரச்னை, போர்க்கால சூழல் ஆகியவற்றை மையப்படுத்திதான் வெளிவந்தன.

ஆனால், தற்போது தமிழில் உருவாகியுள்ள யாழ் என்ற படம் அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு யாழ் பகுதியைச்சேர்ந்த ஒரு காதலர்களைப்பற்றிய கதையில் தயாராகியுள்ளது.

அதோடு இலங்கையின் நேட்டிவிட்டி அழகையும் இந்த படம் சொல்கிறதாம். அதனால் இந்த படத்தில் உள்ள மொத்தம் 5 பாடல்களிலும் காதல் மட்டுமின்றி யாழ் மற்றும் மொத்த இலங்கையின் நேட்டிவிட்டி அழகையும் இந்த பாடல்களில் அழகு மிளிர சொல்லியிருக்கிறாராம் டைரக்டர் ஆனந்த்.

அதோடு, இலங்கையின் அழகை இங்குள்ள கவிஞர்களை விட அங்குள்ளவர்கள்தான் சரியாக சொல்ல முடியும் என்பதால் இலங்கை தமிழ் கவிஞர்களான யாழ் பாரதி, பாலகுமாரன் ஆகியோரை வைத்து எழுத வைத்திருப்பதாக சொல்லும் யாழ் படத்தின் இயக்குனர் ஆனந்த், அவர்கள் எழுதியுள்ள எப்பன் எப்பனை, பனைமரக்காடா, யாழ் அழகே, பூவரசம் பூவை, விழி வானிலே ஆகிய ஐந்து பாடல்களும் முத்துக்களாக அமைந்துள்ளன.

அதோடு தமிழ்நாட்டு ரசிகர்கள் இந்த பாடல்களைக்கேட்டாலே இலங்கையின் அழகை புரிந்து கொள்ளலாம் அந்த அளவுக்கு இந்த இரண்டு கவிஞர்களும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions