ரசிகர்களுக்கு எய்தவன் படக்குழுவினரின் ஓணம் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள்!

Bookmark and Share

ரசிகர்களுக்கு எய்தவன் படக்குழுவினரின் ஓணம் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள்!

மிஷ்கினின் நந்தலாலா படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கலையரசன். கபாலியை தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவாகநடித்திருக்கும் படம் எய்தவன்.

மதயானைக்கூட்டம் படத்தில் விக்ரம் சுகுமாரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை Friends Festivel Films நிறுவனம் சார்பாக சுதாகரன் தயாரித்துள்ளார். பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைடஸ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பசங்க போன்ற தரமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் பார்க்கும் ஆவலையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த டீசரை யூ டியூபில் கண்டு மகிழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் ரசிகர்களுக்கு எய்தவன் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions