எமன் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி!

Bookmark and Share

எமன் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற விஜய் ஆண்டனி!

இசை அமைப்பாளராக அறிமுகமாகி முக்கிய ஹீரோவாக உயர்ந்து இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த ‘நான்’, ‘சலீம்‘, ‘இந்தியா– பாகிஸ்தான்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான இவரது ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து விஜய் ஆண்டனி தற்போது ‘எமன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருக்கிறார் விஜய் ஆண்டனி. மும்பையில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்து வருகிறார். ஜீவா சங்கர் இயக்கி வரும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசை அமைத்து வருகிறார்.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமிர் பிடிச்சவன் விஜய் ஆண்டனி செய்யும் அசத்தலான செயல் - எதிர்ப்பரப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions