'என்னை அறிந்தால்' எவ்வளவு வசூல்...?

Bookmark and Share

'என்னை அறிந்தால்' எவ்வளவு வசூல்...?

அஜித் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'என்னை அறிந்தால்' படம் இந்த மாதம் 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடித்ததால் படம் எப்படியும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று அஜித் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், தனது முந்தைய படங்களின் சாயலிலேயே இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்து படத்திற்கு மைனஸ் பாயின்டாக அமைந்தது. இருந்தாலும் அஜித் என்ற 'ஒன் மேன் ஷோ'வால் படத்திற்கு முதல் வாரம் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் நன்றாகவே இருந்த்து என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகாமல் போனது, கொஞ்சம் குழப்பமான திரைக்கதை, ஆகியவை பெரும்பாலான ரசிகர்களை ஈர்க்க முடியாமல் போனது.

இதனிடையே படம் வெளியாகிய பத்து நாட்களுக்குள் இந்தப் படம் சுமார் 75 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளதாம். மற்ற மாநிலங்களில் 15 கோடி ரூபாயும் மற்ற உலக நாடுகளில் 12 கோடி ரூபாய் வரையும் வசூலாகியிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

படத்தின் தொலைக்காட்சி உரிமை 15 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆக, மொத்தம் இதுவரை படத்தின் வசூல் 92 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்றுள்ளது.

திரையரங்குகள் மூலம் சுமார் 40 கோடி ரூபாய் வரை பங்குத் தொகை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாம். 'அனேகன்' படம் வராமலும், 'என்னை அறிந்தால்' படம் பொங்கலுக்கும் வந்திருந்தால் இந்த 10 நாட்களில் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions