என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் :கெளதம்மேனன் பளீச்!

Bookmark and Share

என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் :கெளதம்மேனன் பளீச்!

மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் என பல படங்களை இயக்கியவர் கெளதம்மேனன். இதில் பல படங்கள் சூப்பர் ஹிட்தான்.

என்றபோதும் அந்த படங்களில் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை. இந்த நிலையில், கடைசியாக அஜீத்தை வைத்து இயக்கிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கப்போவதாக அந்த படம் திரைக்கு வந்ததில் இருந்தே செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

முக்கியமாக அஜீத் ரசிகர்கள் இணையதளங்களில் இப்படியொரு செய்தியை பரப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அதுகுறித்து கெளதம்மேனன் விடுத்துள்ள செய்தியில், என்னை அறிந்தால் ஒரு மாஸ் படம். அஜீத் நடித்ததால் அந்த படம் ஹிட்டானது.

அந்த படத்தை இன்னொரு பாகம்கூட தொடர முடியும். ஆனால் எனக்கு இப்போதுவரை அப்படியொரு ஐடியாவே இல்லை. மேலும், நான் இயக்கிய எந்த படத்தையும் இரண்டாம் பாகம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை.

ஒருவேளை என்னை அறிந்தால் படத்தின் 2ம் பாகம் எடுப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அதுபற்றி யோசிப்பேன். மற்றபடி இப்போது சிம்புவை இயக்கும் படவேலைகளில் மட்டுமே எனது முழுகவனமும் உள்ளது என்கிறார் கெளதம்மேனன்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions