நாலே நாளில் ரூ.50 கோடியை தாண்டியது 'என்னை அறிந்தால்' வசூல்!

Bookmark and Share

நாலே நாளில் ரூ.50 கோடியை தாண்டியது 'என்னை அறிந்தால்' வசூல்!

அஜித் நடித்து வெளியாகியுள்ள என்னை அறிந்தால் திரைப்படம், அவரது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத வசூல் சாதனை படமாக மாறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை தொடங்கி இந்த வார இறுதிவரையிலான நான்கே நாட்களில் அப்படம், நாடு முழுவதிலும், ரூ.52 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித், திரிஷா, அனுஷ்கா, பார்வதி நாயர், அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்க கடந்த வியாழக்கிழமை வெளியானது என்னை அறிந்தால்.

தமிழகத்தில் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.10.5 கோடியாக இருந்தது. லிங்கா முதல் நாளில் ரூ.12.8 கோடியும், கத்தி முதல் நாளில் ரூ.12.5 கோடியும் வசூலித்து இருந்த நிலையில், முதல் நாள் வசூலில் மூன்றாம் இடத்தை என்னை அறிந்தால் பிடித்துள்ளது.

ஆனால் மற்ற இரு படங்களும், வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், என்னை அறிந்தால், திரைப்படம், வியாழக்கிழமையே வெளியாகிவிட்டது. எனவே வார இறுதி கலெக்ஷன் எப்படி என்பதை திரையுலக புள்ளி விவர நிபுணர்கள் ஆராய ஆரம்பித்தனர்.

'தலை'நகர் சென்னையில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் என்னை அறிந்தால் திரைப்படம் ரூ.2.18 கோடிகளை வசூலித்துள்ளதாம்.அமெரிக்காவில் எந்த ஒரு அஜித் படத்தைவிடவும் அதிக வசூலை வாரி குவித்துள்ளது என்னை அறிந்தால்.

அங்கு, ரூ.2.6 கோடி வசூலித்துள்ளது.இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.52.68 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்து, ரூ.100 கோடி கிளப்பில் என்னை அறிந்தால் படமும் இடம் பிடிக்கும் என்று ஆரூடம் கூறுகின்றனர் கோலிவுட்நிபுணர்கள்.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions