50 நாளை கடந்தார் சத்யதேவ்

Bookmark and Share

50 நாளை கடந்தார் சத்யதேவ்

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய படமான என்னை அறிந்தால் இன்றுடன் (மார்ச் 26) 50வது நாளை கடக்கிறது. கடந்த பிப்ரவரி 5ந் தேதி வெளியான படம், முதல் 25 நாட்கள் அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ்புல்லாகவும். அதன் பிறகு ஆவரேஜ் கலெக்ஷனுடம் ஓடியது.

தற்போது சத்யம், எஸ்கேப், பிவிஆர், லக்ஸ், மாயாஜால், ஐநாக்ஸ், வளாகங்களில் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியூர்களில் ஓரிரு தியேட்டர்களில் 50 நாளை தொட்டிருக்கிறது.

படத்திற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான விமர்சனங்களும் வந்தது என்றாலும் அஜீத்தின் அமைதியான, வித்தியாசமான நடிப்பு அவரது ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களுக்கு பிடித்திருந்தது.

சத்யசாய் பிலிம்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்தினம் தயாரித்திருந்தார். தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அஜீத் நடித்த சத்யதேவ் என்ற போலீஸ் கேரக்டர் அவரது கேரியரில் முக்கியமானதாக அமைந்து விட்டது.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions