எதிர்பார்ப்பின் உச்சத்தில் 'என்னை அறிந்தால்'

Bookmark and Share

எதிர்பார்ப்பின் உச்சத்தில் 'என்னை அறிந்தால்'

தமிழ்நாட்டில் இன்னும் 24 மணி நேரத்திற்குள்ளாகவும், சில வெளிநாடுகளில் இன்று இரவும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வரும், ஜனவரி 29ம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு நாளை வெளியாகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பே படத்தின் முன்பதிவு ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்தவர்கள் போக, மற்ற ரசிகர்கள் படத்திற்காக முன்பதிவு செய்ய மிகவும் ஆவலாக உள்ளனர்.

சில திரையரங்குகள் பக்கம் நாமும் சுற்றித் திரிந்த போது அதைக் காண முடிந்தது. முன்பதிவு நடைபெறும் பல ஊர்களிலும் இதே நிலைமைதான் உள்ளது. எப்போதுமே அஜித் படத்திற்கு 'மாஸ் ஓபனிங்' இருப்பது வழக்கம், அது இந்தப் படத்திற்கு இன்னும் கூடுதலாக இருக்கிறது என திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள்.

பல ஊர்களில் படம் வெளியாகும் முதல் நாளில் மொத்த காட்சிகளுமே ரசிகர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை திரையரங்கத்தினர் நிர்ணயித்துள்ளார்கள்.

அப்படி மொத்தமாகக் காட்சிகளை ரசிகர்கள் 'குத்தகை'க்கு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்து வருடங்களுக்கு முன்னால் ஆந்திராவில் மட்டுமே இப்படி நடக்கும்.

தற்போது தமிழ்நாட்டிலும் இது பரவி விட்டது. அதிகாலைக் காட்சிகளும் தற்போது இடம் பெறும் அளவிற்கு மாறியுள்ளதற்கு அஜித் ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்கள். அதைத்தான் மற்ற நடிகர்களும் தற்போது ஃபாலோ செய்வதாகவும் தியேட்டர்காரர்களே சொல்கிறார்கள்.

'எந்திரன், கத்தி, லிங்கா, ஐ' ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை 'என்னை அறிந்தால்' கண்டிப்பாக முறியடித்து விடும் என்பதே வெளியீட்டிற்கு முந்தைய பேச்சாக உள்ளது.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions