'என்னை அறிந்தால் - காக்கி சட்டை' ஒரே கதையா...?

Bookmark and Share

'என்னை அறிந்தால் - காக்கி சட்டை' ஒரே கதையா...?

'என்னை அறிந்தால்' படத்தின் வெளியீட்டிற்கு முன் இந்தப் படத்தின் கதையும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'காக்கி சட்டை' படத்தின் கதையும் ஒரே கதைதான் என பரவலாக ஒரு பேச்சு எழுந்தது.

படத்தைப் பார்த்த பிறகுதான் இரண்டும் ஒன்றல்ல, வெவ்வேறு என வதந்தியைப் பரப்பியவர்களே வாயை மூடிக் கொண்டார்களாம். படத்தின் கதாநாயகர்கள் இருவரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் இரண்டு படத்திற்குமான ஒரே ஒற்றுமை 'என்னை அறிந்தால்' படத்திற்கும் கௌதம் மேனன் முன்னர் இயக்கிய படங்களுக்கும்தான் அதிக ஒற்றுமை என பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

'காக்க காக்க, வேட்டையாடு விளையாடு' ஆகிய இரண்டு கௌதம் மேனனின் படங்களும் மறக்க முடியாத படங்கள். அந்தப் படங்களின் தாக்கம் ’என்னை அறிந்தால்’ படத்தில் அதிகமாகவே இருக்கிறது என்பதுதான் அந்தப் படங்களின் தீவிர ரசிகர்கள் சொல்லும் கருத்தாக இருக்கிறது.

’என்னை அறிந்தால்’ படம் போன்று சீரியசான கதை கொண்ட படமாக  இல்லாமல் ’காக்கி சட்டை’ கலகலப்பான படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளதாம்.

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் திரைக்கு முன்னால் வெற்றி பெற்ற ஜோடிக் கூட்டணியான சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் ’எதிர் நீச்சல்’ படத்தின் திரைக்குப் பின்னால் உருவான வெற்றிக் கூட்டணியான இயக்குனர் துரை.செந்தில்குமார், சிவகார்த்திகேயன் ’காக்கி சட்டை’ படத்தில் இணைந்திருப்பதை கோலிவுட்டினர் சென்டிமென்ட்டாகவே பார்க்கிறார்களாம். ’காக்கி சட்டை’ சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை இன்னும் நிரப்புமா என்பது இரண்டு வாரங்களில் தெரிந்துவிடும்...!


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions