என்னை அறிந்தால்... அட, அதுக்குள்ள திருட்டு விசிடியா!

Bookmark and Share

என்னை அறிந்தால்... அட, அதுக்குள்ள திருட்டு விசிடியா!

என்னை அறிந்தால் படம் நாளைதான் உலகெங்கும் வெளியாகிறது. ஆனால் அதற்குள் படம் திருட்டு விசிடியாக வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான திருட்டு விசியிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டுகளை சிலர் சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இப்போதெல்லாம் படங்கள் தயாரிப்பிலிருக்கும்போதே அதன் காட்சிகள் லீக் ஆகி விடுகின்றன சில நேரங்கள் முழுப்படமும் வீடியோவாக ஆன்லைனில் வந்துவிடுகிறது. பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீசாகும்போதே, அதன் திருட்டு சிடியும் விலைக்குக் கிடைக்கிறது.

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கும் இதே நிலைதான். இந்தப் படம் நாளைதான் வெளிவரவிருக்கிறது. ஆனால் நேற்றே இந்தப் படத்தின் திருட்டு சிடி வந்துவிட்டதாகக் கூறி, அந்த வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் விசாரித்தால், "இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. முழு பாதுகாப்புடன் படத்தின் காட்சிகளை உருவாக்கியிருக்கிறோம். அது ஏதேனும் போலி சிடியாக இருக்கலாம்," என்றார்கள்.

'சிடி கிடக்கட்டும்டா... தல படத்தை ஒரு வாட்டி தியேட்டர்ல பாக்கணும் மச்சி' என்னும் ரசிகர்கள் உள்ளவரை, எத்தனை விதமான சிடிகள் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது...!


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions