தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!

Bookmark and Share

தமிழ்நாட்டில் 500 திரையரங்குகளில் என்னை அறிந்தால்!

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் உட்பட பல நட்சத்திரங்களை வைத்து கௌதம் மேனன் இயக்கியிருக்கும் என்னை அறிந்தால் படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. இதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று நம்பலாம். காரணம் உலகம் முழுக்க முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தியேட்டர்களை இறுதி செய்யும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகிறது. 

சென்னை நகரத்தில் மட்டும், 40க்கும்ட மேற்பட்ட தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் ரிலீஸ் ஆகிறது. சென்னை ஏரியாவை எம்.கே.எண்டர்பிரைசஸ் என்ற திரைப்பட விநியோக நிறுவனம் வாங்கி உள்ளது. இதே நிறுவனமே கோயம்புத்தூர் ஏரியாவையும் வாங்கி உள்ளது. கோவையில் 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

என்.எஸ்.சி. என்கிற வட மற்றும் தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவை மன்னன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது. செங்கல்பட்டு ஏரியாவில் 115க்கும் மேலான தியேட்டர்களிலும் வட ஆற்காடு தென் ஆற்காடு ஏரியாவில் 50க்கும் மேலான தியேட்டர்களிலும் என்னை அறிந்தால் படத்தை வெளியிடுகிறது மன்னன் பிலிம்ஸ்.

சேலம் ஏரியாவில் (ஜி ஃபிலிம்ஸ்) 55க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவில் (பரதன் ஃபிலிம்ஸ்) - 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், மதுரை ஏரியாவில் (அழகர் ஃபிலிம்ஸ்) 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், திருநெல்வேலி ஏரியாவில் (ரூபன் ஃபிலிம்ஸ்) 15க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியாகிறது என்னை அறிந்தால் படம்.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions