தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!

Bookmark and Share

தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015-ம் வருடம் வெளியான படம் என்னை அறிந்தால். அஜித்தின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அப்படி மட்டும் இப்படத்தை ஒதுக்கிவிட முடியாது.

இந்த படத்தில் அஜித் நடித்த சத்யதேவ் கதாபாத்திரம் போல் வேறெந்த படத்திலும் அவர் நடித்ததில்லை. எனவே இந்த படம் தல ரசிகர்களுக்கு இன்னும் ஸ்பெஷல்.

இப்படம் சத்யதேவ் IPS எனும் பெயரில் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. கன்னடத்தில் வேற்று மொழி படங்களை டப் செய்து வெளியிடுவதற்கு சில ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வாரத்துடன் அந்த தடை நீங்கியுள்ளது.

இந்நிலையில் தடைக்கு பிறகு வெளியாகும் முதல் தமிழ் படமாக என்னை அறிந்தால் இன்று (மார்ச் 3ல்) கன்னடத்தில் திரைக்கு வந்துள்ளது. அதுவும் மொத்தம் 60 திரையரங்குகளில் வெளியாகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions