தமிழில் டப் ஆகிறது தெலுங்கு எவடு

Bookmark and Share

தமிழில் டப் ஆகிறது தெலுங்கு எவடு

தெலுங்கில் ராம்சரண், அல்லு அர்ஜூன் இணைந்து நடித்த எவடு படம், தமிழில் மகதீரா என்ற பெயரில் டப் ஆகிறது. இதில் ஸ்ருதிஹாசன், எமி ஜாக்சன் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார், ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். வம்சி படிப்பள்ளி இயக்கி உள்ளார்.

அல்லு அர்ஜூனும், காஜல் அகர்வாலும் காதலர்கள் ஒரு பிரச்னையில் வில்லன் கோஷ்டிகள் காஜல் அகர்வாலை கொன்று விடும் அல்லு அர்ஜுன் தப்பித்துவிடுவார்.

இதில் அவரது முகம் எரிந்து கருகிவிடும். அவருக்கு ராம்சரணின் முகம் பொருத்தப்படும். அதன் பிறகு அவர் ராம்சரண் முகத்தோடு எப்படி எதிரிகளை பழிவாங்குகிறார் என்பது கதை.

இதனை டப் செய்து வெளியிடும் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது: தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம். காஜல் அகர்வால், எமி ஜாக்சன், ஸ்ருதிஹாசன் மூவருமே கிளாமராக நடித்திருக்கிறார்கள். வித்தியாசமான கதை. பல தலைப்புகளை யோசித்து தெலுங்கில் ஹிட்டான ராம்சரணின் மகதீரா தலைப்பையே வைத்து விட்டோம்.

மக என்றால் ஆண், தீரா என்றால் வீரன். ஆண் வீரன் என்று பொருள். மகதீரா என்பது சுத்தமான தமிழ் சொல். அதையே தலைப்பாக வைத்திருக்கிறோம். அடுத்த மாதம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறோம். என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions