பீப் பாட்டு: உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு தூக்குல போடுங்க!- ஒய்.ஜி.மகேந்திரா

Bookmark and Share

பீப் பாட்டு: உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு தூக்குல போடுங்க!- ஒய்.ஜி.மகேந்திரா

கடும் கண்டனம் மற்றும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பீப் பாடலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து தூக்கிலிட வேண்டும் என்று ஒய்.ஜி.மகேந்திரா கருத்துத் தெரிவித்துள்ளார். பீப் பாடலுக்கு எதிராக நாளுக்குநாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

கண்டனம் இப்பாடல் குறித்து ஏற்கனவே கங்கை அமரன், வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில்அனிருத்தின் நெருங்கிய உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரா ஒய்.ஜி.மகேந்திரா தனது பேஸ்புக் பக்கத்தில் ஆவேசமாக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவர் கூறும்போது "மற்றுமொரு சர்ச்சைக்குரிய தமிழ்ப் பாடல் பீப் பாடல். அனிருத் எனக்கும் அந்தப் பாடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை எனத் தெளிவாகக் கூறி இருக்கிறார். 

பொறுப்பாளி யார் இந்தப் பாடலுக்கு பொறுப்பாளி யாராக இருந்தாலும் இந்தப் பாடலை நான் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பாடல் உருவாக, வெளியாக காரணம் யார் என்பதைக் கண்டறியவேண்டும். இந்த அசிங்கமான பாடலில் எந்தவொரு உணர்வும், எந்தவொரு மெலொடியும் இல்லை.

குழந்தைகள் குழந்தைகளை அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தை என்ன எனக் கேட்கச் செய்து, பெரியவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் பாடலாக பீப் பாடல் இருக்கிறது.


Post your comment





Related News
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
இங்கு உட்கார எனக்கு வெட்கமாக உள்ளது- சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்
ஒரே படத்தில் தந்தை, மகளுடன் நடிக்கும் ஆர்யா!
கனடாவில் தெறி திரைப்படம் ரத்து!
கமல் இல்லையென்றால் நான் இல்லை: இயக்குனர் மகேந்திரன் நெகிழ்ச்சி
மீண்டும் இணையும் அட்லி – மகேந்திரன் கூட்டணி!
விஜய்யிடம் ரஜினியை பார்க்கிறேன் – பிரபல இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions