சிறுவயது மோகன்லால் டைரக்சனில் உருவாகும் 'யூ டூ புரூட்டஸ்'..!

Bookmark and Share

சிறுவயது மோகன்லால் டைரக்சனில் உருவாகும் 'யூ டூ புரூட்டஸ்'..!

மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 20 வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும்.

தந்தை, மகன் உறவில் சிறுவயதில் இருந்தே ஏற்படும் விரிசலை ஒரு புதிய கோணத்தில் காட்டியிருந்தது இந்தப்படம். தமிழில் சுந்தர்.சி நடித்த 'வீராப்பு' இதன் ரீமேக் தான். இந்த ஸ்படிகத்தில் சின்ன வயது மோகன்லாலாக, தந்தையின் அன்புக்கு ஏங்கும் மகனாக, மாணவனாக அற்புதமாக நடித்த பையன் தான் ரூபேஸ் பீதாம்பரன்.

பின்னாளில் வளர்ந்து  வாலிபனான ரூபேஸ் சினிமாவில் தனது துறையாக தேர்ந்தெடுத்தது நடிப்பை அல்ல.. டைரக்சனைத்தான். மூன்று வருடங்களுக்கு முன் துல்கர் சல்மானை வைத்து 'தீவ்ரம்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரூபேஸ், தற்போது இயக்கிவரும் படம் தான் 'யூ டூ புரூட்டஸ்'.

சரித்திரப்புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை டைட்டிலாக கொண்ட படம் என்றாலும் ஒரிஜினல் கதையைப்போல் சோக கீதம் வாசிக்காமல், முழுநீள காமெடிப்படமாக உருவாகிறதாம்.

இந்தப்படத்தில் சீனிவாசன், ஆசிப் அலி, அஜூ வர்கீஸ் உட்பட ஆறு முக்கியமான ஆண் கதாபாத்திரங்களும், ஐந்து பெண் கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர். அதில் ஈனா சஹா என்கிற நடிகையின் தாய்மொழி பெங்காலியாக இருந்தாலும் மலையாள வார்த்தைகளை அவ்வளவு தெளிவாக உச்சரிக்கிறாராம்.

வழக்கமாக மற்ற மொழியை சேர்ந்தவர்கள் மலையாளம் பேசினாலும் அவர்களை தனியே கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஈனா பேசுவதை கேட்டால் அசல் மலையாளி பேசுவது போலவே இருக்கிறது என சர்டிபிகேட் கொடுக்கிறார் சின்ன மோகன்லால்.

நேற்றோடு இந்தப்படத்தின் 34 நாட்கள் படப்பிடிப்பும் மொத்தமாக முடிவடைந்து விட்டதாம். படம் மார்ச்-20ல் ரிலீஸாகும் என தெரிகிறது. 


Post your comment





Related News
மெர்சல் மன்னன் விஜய்க்கு யூ ட்யூப் கொடுத்த புது பட்டம், தெறிக்க விடும் ரசிகர்கள்.!
இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்: சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனுக்கு இளம் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த தயாரிப்பாளர்
ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அளிக்ககோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் வீடுகள் முற்றுகை.. இளைஞர்கள் அதிரடி
மீண்டும் திரண்ட இளைஞர்கள்.. மெரீனாவில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
இளைஞர்களுக்கு அடிப்பணிந்தது மத்திய அரசு… ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல்
ஆள்தோட்டபூபதி பாடல் உருவான கதை சொன்ன மிஷ்கின்!
கார்ட்டூன் சேனல்களில் கோடையை கொண்டாடும் குழந்தைகள்
\'லவ் யூ மருமகனே..\' இப்படி ஒரு தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி இயக்குநர்!
டூரிங் டாக்கீஸ் படம் ரிலீஸ்: எஸ்.ஏ.சந்திரசேகரனை பாராட்டிய ஷங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions