ஐ டியூன் முதலிடத்தில் யுவனின் பாடல்

Bookmark and Share

ஐ டியூன் முதலிடத்தில் யுவனின் பாடல்

கிருஷ்ணா, சுவாதி இணைந்து நடித்துள்ள படம் ‘யாக்கை’. இப்படத்தை குழந்தை வேலப்பன் இயக்கியிருக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான ‘நீ...’ எனத் தொடங்கும் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13ம் தேதி வெளியானது.

வெளியான வேகத்தில் ஐ டியூன் அட்டவணையில் உச்சம் தொட்டிருக்கும் இந்தப் பாடல், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் அட்டகாசமாக டிரென்ட் அடித்துக் கொண்டு இருக்கிறது.

பாடல் வெளியாகி சில நாட்களிலேயே இந்தப் பாடல் பிரபலமாகி இருப்பதோடு, சமூக வலைதளங்களில் 'நீங்கள் திரையில் பார்க்க விரும்பும் பாடல் எது? என்ற வாக்கெடுப்பில் முதல் இடத்துக்கும் வந்திருக்கிறது. 

மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் தன் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி ‘யுவன் இஸ் பேக்’  என்று ட்வீட் செய்துள்ளார். 

ஐ டியூன் தமிழ் அட்டவணையில் முதல் இடத்துக்கு வந்தது மட்டுமல்லாமல், யூடியூபில் ஒரு லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions