மதமாற்றம் பற்றி முதன் முறையாக வாய்திறந்தார் யுவன்

Bookmark and Share

மதமாற்றம் பற்றி முதன் முறையாக வாய்திறந்தார் யுவன்

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். மூன்றாவது முறையாக முஸ்லிமாக மதம் மாறி கீழக்கரையைச் சேர்ந்த ஜெபருன்னிசா என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் யுவனின் தங்கை பவதாரிணி தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. தன் திருமணம் மற்றும் மதமாற்றம் குறித்தும் இதுவரை யுவன் பேசியதில்லை.

நேற்று (மார்ச் 29) ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பாக அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது முதன் முறையாக தன் மதமாற்றம், திருமணம் பற்றி பேசினார். 

அவர் கூறியதாவது: மதம் மாறியது எனது தனிப்பட்ட விஷயம். பிடித்திருந்தது மாறினேன். அதுபற்றி மேலும் பேசுவதற்கு எதுவுமில்லை. என் மதமாற்றம், திருமணம்... எதற்கும் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உனக்கு எது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதைச் செய் என்று சொல்லிவிட்டார்.

திருமணம் ரகசியமாக நடந்தது போன்று மீடியாக்களில் செய்திகள் வந்தது. ஒரு இஸ்லாமிய திருமணம் எப்படி நடக்குமோ அப்படி நடந்தது. என் குடும்பத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஆனால் பெண் வீட்டார் 2 நாட்களுக்குள் திருமணத்தை நடத்த விரும்பியதால் அந்த குறுகிய கால இடைவெளிக்குள் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணம் முடிந்த மறுநாளே மனைவியுடன் சென்று அப்பாவிடம் ஆசி பெற்றேன்.

எனது பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றி இருந்தாலும், சினிமாவில் யுவன்சங்கர் ராஜா என்றே இருக்கும். அந்த பெயரில் அறிமுகமாகித்தான் புகழ்பெற்றேன்.

திடீரென்று பெயரை மாற்றினால் ரசிகர்களுக்கு குழப்பம் வரும். அதனால் யுவன் என்கிற பெயரே தொடரும். 

இவ்வாறு யுவன் கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions