யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ்!

Bookmark and Share

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ்!

ஒரே இரவில் பிரபலம் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் திரையுலகில் பிரபலம் அடைய வேண்டுமென்றால் அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை…அத்தகைய சிறப்பான குணங்களால் தமிழக ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று இருப்பவர் பாடலாசிரியர் – பாடகர் அருண்ராஜா காமராஜ்.

தற்போது இவர் இளைஞர்களை தன்னுடைய துள்ளலான இசையால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார்.

ஜெய் – அஞ்சலி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் ‘பலூன்’ திரைப்படத்தை ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சினிஷ் இயக்கத்தில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிவது பலூன் படத்திற்கு கூடுதல் பலம்.
“யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்….அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..” என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் அருண்ராஜா காமராஜ்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்றுவரும் இந்த சிறப்பான கூட்டணியானது, விரைவில் இசை பிரியர்களை கவர உள்ளது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions