டுவிட்டரில் மீண்டும் இணைந்த யுவன் சங்கர் ராஜா

Bookmark and Share

டுவிட்டரில் மீண்டும் இணைந்த யுவன் சங்கர் ராஜா

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் மீண்டும் இணைந்துள்ளார்.

முன்னதாக டுவிட்டரில் இணைந்திருந்த யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு யுவன் சங்கர் ராஜாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டுவிட்டரில் அவரைப் பற்றிய தவறான தகவல்களும் வந்தன. இதனால் டுவிட்டரில் இருந்து அவர் விலகுவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் டுவிட்டரில் இணைந்துள்ளார் யுவன்சங்கர் ராஜா. @thisisysr என்ற முகவரியுடன் இவரது டுவிட்டர் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் டுவிட்டாக, சூர்யா, யுவன், வெங்கட்பிரபு மூன்றுபேரும் இருக்கும் புகைப்படத்துடன் வெங்கட் பிரபு போட்டுள்ள டுவிட்டை, ரீ டுவிட் செய்துள்ளார் யுவன்.

யுவன் மறுபடியும் டுவிட்டருக்கு வந்துள்ளது அவரது ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. யுவன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது இசைக் கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions