ஜேம்ஸ் பாண்டிற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா

Bookmark and Share

ஜேம்ஸ் பாண்டிற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா

ஜேம்ஸ் பாண்டிற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா,

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில், சில தனித்துவமான காணொளிகள் வைரலாக பரவுவதை நாம் பார்த்து இருக்கிறோம்…. ஆனால் தற்போது முதல் முறையாக ‘பான் பஹார்’ என்னும் ஒரு விளம்பர படம், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகிறது…அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது.

ஒன்று, ஹாலிவுட் ‘ஜேம்ஸ் பாண்ட்’ புகழ் பியர்ஸ் பிராஸ்னன் இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பது…. மற்றொன்று, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த விளம்பர படத்திற்கு இசையமைத்திருப்பது….

அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர படத்தின் பின்ணணி இசைக்காக யுவன்ஷங்கர் ராஜா உபயோகப்படுத்தி இருக்கும் ‘வயோலா’ ரக இசை கருவியும், ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களும், ரசிகர்களுக்கு ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட்’ படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனிற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் செய்தி, தற்போது இந்திய திரையுலகினரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions