யுவன் சங்கர்ராஜாவினால் மாஸ் படத்துக்கு பிரச்சனை

Bookmark and Share

யுவன் சங்கர்ராஜாவினால் மாஸ் படத்துக்கு பிரச்சனை

வெங்கட் பிரபு இயக்கத்தில் நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு கதாநாயகிகள் உடன் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.  

சமுத்திரக்கனி, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மாஸ் படத்தை முதலில் மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.  ஆனால், அதற்குள் பட வேலைகள் முடிவடையாது என்பதால் தற்போது ரிலீஸ் தேதியை மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்புதான் டப்பிங் பணிகள் முடிவடைந்தன  என்றும், தற்போது மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மற்றும் டீஸரை உருவாக்கும் பணியில் வெங்கட்பிரபு பிஸியாக இருக்கிறார் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.  

மாஸ் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  அவருக்கு தெரியாமலே தமனை வைத்து ஒரு பாடலை பதிவு செய்து படப்பிடிப்பும் நடத்தினார்கள். அதனால் யுவன்சங்கர்ரராஜா கடுப்பானதாக சொல்லப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பாடலிசையின் ஃபைனல் அவுட்புட்டான டாட்டைக் கொடுக்காமல் இன்னும் இழுத்தடிக்கிறாராம் யுவன். டாட் கிடைத்து சிடியை தயார் பண்ண குறைந்தபட்சம் ஒரு மாதம் அவகாசம் கேட்கிறதாம் ஆடியோ கம்பெனி.

ஒருவேளை இன்றைக்கு யுவன்சங்கர்ராஜா டாட் கொடுத்தாலும் ஆடியோ சிடி தயாராக மே 17 தேதி ஆகிவிடும். எனவே இதன் காரணமாக மாஸ் படம் மே 15 அன்று வெளிவராது என்று அடித்துச் சொல்கிறார்கள்.

மே 22 அல்லது மே 29 தேதியில்தான் மாஸ் வெளியாகும் என ஆடியோ நிறுவன வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. மாஸ் படத்துக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மே 15 அன்று யுடிவியின் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்துக்கு ரூட்டு க்ளியர் ஆகிவிட்டது.

 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions