தரமணியை எதிர்பார்க்கும் யுவன்ஷங்கர்ராஜா!

Bookmark and Share

தரமணியை எதிர்பார்க்கும் யுவன்ஷங்கர்ராஜா!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படம் வெற்றிபெறவில்லை. என்றபோதும், அந்த படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.

பின்னர் தனது 100வது படமான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்று மெனக்கெட்டார். ஆனால் அந்த படமும் ஓடவில்லை. அவரது பாடல்களும் ஹிட்டாகவில்லை.

இதனால் அது மனதளவில் யுவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அதற்கடுத்து யட்சன், இடம்பொருள் ஏவல், தரமணி, கான், ஓம் என பல படங்கள் கைவசம் இருந்ததால் அந்த படங்களில் கவனத்தை திருப்பினார்.

முக்கியமாக, ராம் இயக்கும் தரமணி படத்தை அடுத்தபடியாக பெரிதாக எதிர்பார்க்கிறாராம் யுவன். காரணம். இதற்கு முன்பு ராம் இயக்கி நடித்த தங்கமீன்கள் படம் யுவனுக்கு நல்ல பெயரை கொடுத்ததோடு, அந்த படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் -என்ற பாடல் பாடலாசிரியர் முத்துக்குமாருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.

அதனால், இந்த தரமணி படத்தை முக்கியமான படமாக கருதும் யுவன், தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் பின்னணி இசையமைக்கும் வேலைகளில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார். 

 


Post your comment





Related News
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions