மே-9ல் நெல்லையில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

Bookmark and Share

மே-9ல் நெல்லையில் யுவனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

இளம் இசை மேதை யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி வருகிற மே மாதம் 9-ந்தேதி திருநெல்வேலியில் நடைபெறவிருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, 1996-ம் வருடம் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலம்  தனது திரை இசைப்பயணத்தைத் துவங்கினார்.

மிகக் குறுகிய காலத்திலேயே தன்னுடைய புதுமையான இசையால் லட்சக்கணக்கான இளம் நெஞ்சங்களை தன்வசப்படுத்தியவர் இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, இளம் இசையமைப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கிறார்.  

இந்நிலையில் 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' என்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி மூலம் தனது ரசிகர்களை குஷிப்படுத்த தயாராகிவருகிறார். சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட இசைப் பயணத்தில், புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் GREEN TREES SOLUTIONS அமைப்புடன் கைகோர்த்து வலம்வர இருக்கிறார் யுவன்!  வருகிற மே மாதம் 9-ந் தேதி யுவன் முதன்முறையாக திருநெல்வேலி, பெல்பின் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இம்மாபெரும் இசை நிகழ்ச்சியில், கோலிவுட் மற்றும் பாலிவுட் இசைக் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

மண்மணக்கும் நமது இசையை உலகெங்கும் ஒலிக்க செய்த நம் மண்ணின் மைந்தன்  'இசை ஞானி இளையராஜா' வுக்கு மகுடம் சூட்டும் சரித்திர நிகழ்வாகவும் நடைபெறவிருக்கிறது 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்' இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions