விருதுகளை திருப்பி கொடுப்பது தனிப்பட்ட விருப்பம்: யுவன்

Bookmark and Share

விருதுகளை திருப்பி கொடுப்பது தனிப்பட்ட விருப்பம்: யுவன்

பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் கோவையில் நிருபர்களிடம் பேசியபோது, “ ‘வாய்ஸ் ஆப் யுவன்’ என்ற இசை நிகழ்ச்சியை சென்னை, துபாய், மலேசியா உள்பட பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் வருகிற ஜனவரி 23–ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. 

இதில் என்னுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். எனது தந்தை இளையராஜாவும் கலந்து கொள்வார். லேசர் ஒளி வெள்ளத்தில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை மக்களுக்காக உதவும் அறக்கட்டளைகளுக்கு அளிக்க உள்ளோம். சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. அதுபோன்ற நிலைமை இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை.

நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. 

கடந்த ஆண்டு நான் 14 படங்களுக்கு இசையமைத்தேன். எனவே ஓய்வு தேவைப்பட்டதால் இந்த ஆண்டு படங்களை குறைத்துக் கொண்டேன். தற்போது தருமி, தரமணி படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். இதில் தரமணி ஐ.டி. இளைஞர்களின் காதலை பற்றியது. 

கர்நாடிக் இசையில் பாடல்கள் இசையமைக்க தயாராக உள்ளேன். இயக்குனர்கள் கையில்தான் அது உள்ளது. டைரக்டர் செல்வராகவனும், நானும் சேர்ந்து பணியாற்ற இருந்த ‘கான்’ படம் நின்று விட்டது. மீண்டும் ஒரு படத்தில் விரைவில் இணைவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions