நல்ல கதை கிடைத்தால் படம் தயாரிப்பேன்- யுவன்

Bookmark and Share

நல்ல கதை கிடைத்தால் படம் தயாரிப்பேன்- யுவன்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா வருகிற ஜனவரி 26-ந் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் ‘வாய்ஸ் ஆப் யுவன்’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். 

நவீன தொழில்நுட்ப வசதியுடன் பிரம்மாண்டமான முறையில் நடக்கவிருக்கும் இந்த இசை நிகழ்ச்சி குறித்து, யுவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “‘வாய்ஸ் ஆப் யுவன்‘ இசை நிகழ்ச்சி மலேசியா, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தி இருக்கிறோம். ஆனால் இதுவரை மதுரையில் இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

தற்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே ‘வாய்ஸ் ஆப் யுவன்‘ இசை நிகழ்ச்சியை நவீன தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்டமான முறையில் வருகிற ஜனவரி மாதம் 26–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார். 

மேலும் அவர் கூறும்போது, என்னையும் என் அப்பா இளையராஜாவையும் ஒருதுளிகூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர் எங்கோ இருக்கிறார். நான் எங்கோ இருக்கிறேன். நான் இப்போது தான் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

தற்போது ‘தருமி’ என்ற புதிய படத்திற்கு இசை அமைத்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இதுவரை வந்ததில்லை. ஆனால் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக தயாரிப்பில் ஈடுபடுவேன். 

என் வாழ்வில் முழுமையான வெற்றி கிடைத்துவிட்டதாக நான் இதுவரை நினைக்கவில்லை. வெற்றிக்காக தினம் தினம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு போட்டியாக நான் என்னை தான் நினைக்கிறேன். 

இளம் இசை அமைப்பாளர்கள் அதிக அளவில் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் போட்டி அல்ல. அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நல்ல நண்பனாக தான் நான் இருப்பேன்... இருக்கிறேன். 

தற்போதைய இசை கவிதையின் கருத்தை மறைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் என் இசையில் வரிகளின் அர்த்தம் கேட்பது போல இசை அமைக்கிறேன். இயக்குனர்கள் வேண்டுகோளுக்கிணங்க இசை அமைக்க வேண்டியுள்ளது” என்றார் யுவன்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions