யுவனை கழட்டி விட்ட லிங்குசாமி

Bookmark and Share

யுவனை கழட்டி விட்ட லிங்குசாமி

லிங்குசாமி இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தில் விஷால் நாயகனாகவும் மீரா ஜாஸ்மின் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய படங்களான ‘பையா’, ‘வேட்டை’, ‘அஞ்சான்’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘சண்டக்கோழி 2’-ம் பாகத்திற்கு யுவன் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லிங்குசாமி அடுத்தப் படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை நேற்று நடைபெற்ற ‘ரஜினிமுருகன்’ ஆடியோ வெளியீட்டின்போது லிங்குசாமி வெளிப்படையாகவே அறிவித்தார். டி.இமான் இசையில் வெளிவரும் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றியடைந்து வருவதால் லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கு டி.இமானை இசையமைப்பாளராக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions