சர்வதேச ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் யுவன்..!

Bookmark and Share

சர்வதேச ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்கும் யுவன்..!

இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 'woolfell' என்ற அனிமேஷன் படம் மூலம் சர்வதேச அரங்கில் தடம்  பதிக்கிறார்.

பிரபாகரன் ஹரிஹரன் என்ற  புதிய இயக்குனரின் தயாரிப்பிலும் , இயக்கத்திலும்   உருவாகும் 'woolfell' இந்திய தொழில்நுட்பக் கலைஞர்களை  உலக அரங்கில் அறிமுகம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

அறிமுக இயக்குனர் . பிரபாகரன் ஹரிஹரன்  மறைந்த நடிகர் எம் ஆர் ஆர் வாசுவின் பேரன் என்பதும், அவர்  சர்வதேச அளவில் சினிமா துறையிலான மேற்படிப்பு முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில்  நிகழ்ச்சி நிர்வாக இயக்குனராக  பணியாற்றிய திவ்யா  வேணுகோபால் இந்தப் படத்தின் கதாசிரியர் ஆவார்.தேசிய விருதுப் பெற்ற கே எல் பிரவீன் 'woolfell' படத்தின்  படதொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

விஸ்வரூபம், உத்தமவில்லன்,மற்றும் ' whiplash ' ஆங்கில படத்தில் சிறப்பு ஒலி வடிவமைப்பாளராக  பணியாற்றிய  குனால் ராஜன் இந்தப் படத்திலும் ஒலி  வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

'woolfell' படத்தின்  போஸ்டர் நேற்று இணையதளத்தின் மூலம் வெளி ஆகி படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை தூண்டியது.வெகு விரைவில் பல்வேறு சர்வதேச நட்சத்திரங்களுடன் , நமது நடிகர்களும் நடிக்க உள்ள 'woolfell ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions