அடுத்த இசைஞானி யுவன் மட்டும் தான்- சீனு ராமசாமி பாராட்டு!

Bookmark and Share

அடுத்த இசைஞானி யுவன் மட்டும் தான்- சீனு ராமசாமி பாராட்டு!

இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த எத்தனையோ பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தற்போது இடம் பொருள் ஏவல் படத்திற்காக வைரமுத்துவையும், இளையராஜாவின் மகனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் இணைத்து வைத்த பெருமை அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிக்குக் கிடைத்தது. 

அந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் சூழ்நிலையில், சீனு ராமசாமி இன்று ஆரம்பித்துள்ள தர்மதுரை படத்திற்காக மீண்டும் வைரமுத்து - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியை சேர்த்து வைத்துள்ளார். 

இப்படத்திற்கான பாடல்கள் பதிவு கடந்த மாதம் ஆரம்பமாகி முடிவுற்றுள்ளது. இது குறித்து அவர் “தர்மதுரை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தந்திருக்கும் பாடல்களை கேட்டுப் பார்த்து மயங்கினேன், அடுத்த இசைஞானி யுவன் என்றது என் மனம்,” என்று சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions