மாஸ் படத்தில் பிரச்சனையா...? யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்...!

Bookmark and Share

மாஸ் படத்தில் பிரச்சனையா...? யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்...!

மாஸ் படத்தின் இசையமைப்புச் சம்பந்தமாக சூர்யாவுக்கும், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் மோதல் என்று கடந்த வாரம் செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

யுவன் கேட்ட சமயத்தில் பாடலைத் தராததால் அவருக்குத் தெரியாமலே இசையைமப்பாளர் தமனிடம் ஒரு குத்துப் பாடலுக்கு இசையமைத்து வாங்கி படப்பிடிப்பை நடத்தினார்கள் என்று சொன்னார்கள்.

அதைத் தொடர்ந்து மாஸ் படத்திற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த யுவன்ஷங்கர்ராஜாவிடம் இந்தப் பிரச்சனைப் பற்றி கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம்...

நயன்தாரா திடீர்னு தேதி கொடுத்ததால அவரசமா அவங்களுக்கு ஒரு பாட்டு தேவைப்பட்டுது.

அந்த அவசரத்துக்கு என்னால அந்தப் பாட்டைக் கொடுக்க முடியலை. அதனால அந்த பாட்டுக்கு நான் டியூன் போட்டேன். தமன் ஆர்க்கெஸ்ட்ரா கன்டக்ட் பண்ணாரு. இதுதான் நடந்தது, ஆனால், அது வேற மாதிரி செய்தியா வெளிய வந்துடுச்சி.

நான் தமன் எல்லாம் அடிக்கடி சந்திச்சிப் பேசிக்குவோம். பிரியாணி டைம்லயே வெங்கட் பிரபு கிட்ட தமன், யுவன் மியூசிக் எனக்குப் பிடிக்கும் அவருடைய பாட்டு ஏதாச்சும் எனக்குக் கொடுங்க, நான் மியூசிக் அரேன்ஞ்ச் பண்ணித் தர்றன்னு கேட்டிருந்தாரு.

பிரியாணி க்கே அப்படி பண்ணலாம்னு இருந்தது, ஆனால், அப்ப பண்ண முடியலை.  

இப்ப அதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சுது, அதனால மாஸ் படத்துல எனக்காக தமன் மியூசிக் அரேன்ஞ்ச் பண்ணிக் கொடுத்திருக்காரு,” என்றார்.

அப்படியென்றால் அந்தக் குறிப்பிட்ட பாட்டில் யார் பெயர் வரும் என்று கேட்டதற்கு டியூன் என்னோடது, ஆனால், அரேன்ஞ்ச் பண்ணது தமன் என்று பதிலளித்தார் யுவன்.
அந்தப் பாடலுக்கு என்ன பெயர் வரும் என்று படத்தின் இசை வெளியிடப்படும் போதுதான் சிடியைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

அது வரை இசை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions