முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி!!

Bookmark and Share

முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி!!

ஸ்ரீனிவாஸ் கவிநயன் இயக்கத்தில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கும் படம் '#பேய் பசி'. இந்த படத்தை 'Rise East Entertainment Private Limited' நிறுவனம் சார்பில்  Sreenidhi Sagar   தயாரித்துள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்தின் சிறப்பம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் ஒரு கிளப் பாடலிற்கு ஒரு வித்தியாசமான, அனைவரையும் உடனே கவரும் குரல் தேவைப்பட்டது. இதற்கு நடிகர் விஜய் சேதுபதி தான் மிக பொருத்தமானவர் என எல்லோரும் உடனே முடிவு செய்தனர். நல்ல படங்களுக்கு என்றுமே தனது ஆதரவை தரும் விஜய் சேதுபதி '#பேய் பசி' படத்தின் இந்த பாடலிற்காக பாடகராக மாறியுள்ளார்.

வசனம் பேசுவதில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து மிகப்பெரிய வெற்றியை பிடித்திருக்கும் விஜய் சேதுபதி இந்த கிளப் பாடலை தனது அதே வசீகர பணியில் பாடி  அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

டோனி சான் ஒளிப்பதிவில், ஆடை வடிவமைப்பில் தேசிய விருதை பெற்ற பூர்ணிமா ராமசாமியின் ஆடை வடிவமைப்பில், மோகன் முருகதாஸின் படத்தொகுப்பில்  மதனின் கலை இயக்கத்தில் '#பேய் பசி' உருவாகிவருகிறது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions