8 தோட்டாக்கள்' : யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த அதிரடி

Bookmark and Share

8 தோட்டாக்கள்' : யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த அதிரடி

'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் 'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'- ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து  தயாரித்து இருக்கும் திரைப்படம் '8 தோட்டாக்கள்'.

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும் '8 தோட்டாக்கள்'  படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி  கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர்  முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். 

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை, தற்போது 'யு 1 ரெக்கார்டஸ்' நிறுவனத்தின்  சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கி இருப்பது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

இதுகுறித்து யுவன் கூறியதாவது, 

"`8 தோட்டாக்கள்' படத்தின் பாடல்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி மற்றும்  ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

தரமான  பாடல்களை  இசை பிரியர்களுக்கும், ரசிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் 'யு 1 ரெகார்ட்ஸ்' நிறுவனத்தின் முக்கியமான  குறிக்கோள். அந்த வகையில் இந்த `8 தோட்டாக்கள்'  படத்தின் பாடல்கள் நிச்சயமாக ரசிகர்கள் விரும்பிக் கேட்கும்படி இருக்கும்"  என்றார். 

 


Post your comment

Related News
பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எல்லோரின் பேவரட் பாடகருக்கு படத்தில் பாட வாய்ப்பளித்த யுவன்- புகைப்படம் உள்ளே
நான் யாருனு தெரியுமா- ஆட்டம் போட்ட சிம்பு
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
பாகுபலி படத்திற்கு யுவன் இசையா?
வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
விஜய்யும்-யுவனும் இந்த பிரச்சனையால் தான் மீண்டும் இணையவே இல்லையா?
இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக செல்வராகவன்-யுவன் எடுக்கும் ரிஸ்க்- ரசிகர்கள் கொண்டாட்டம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions