பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு

Bookmark and Share

பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு

நந்தமூரி பாலகிருஷ்ணா தனது தாயார் பெயரில் பசவராம தாரகம் புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை தொடங்க இருப்பது அனைவரும் அறிவர்.  

இது சம்பந்தமாக அவர் ஆந்திரா முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் காமினேனி ஸ்ரீநிவாஸ்  ஆகியோருக்கு அம்மாநில புது தலைநகர் பகுதியில் சுமார் 36 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு கேட்டு இருப்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் கேன்சர் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நந்தமூரி பாலகிருஷ்ணாவும் ,பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கும் சந்தித்து பேசி உள்ளனர். யுவராஜ் சிங்கின் யு வி கேன் என்ற அறக்கட்டளை பாலைய்யாவின் மருத்துவமனையோடு இணைந்து செயலாற்ற உள்ளது.

அதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். இரண்டு துறையில் பிரபலமானவர்கள் இணைந்து இது போன்ற சமூக அக்கறை கொண்ட நடவடிக்கையில் ஈடுபடுவது ஒரு நல்ல தொடக்கமாகும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions