எலி கதை பிடித்ததால் வடிவேலு ஜோடியாக நடிக்க சதா சம்மதித்தார்: டைரக்டர் யுவராஜ்

Bookmark and Share

எலி கதை பிடித்ததால் வடிவேலு ஜோடியாக நடிக்க சதா சம்மதித்தார்: டைரக்டர் யுவராஜ்

இம்சை அரசன் 23–ம் புலிகேசி, இந்திர லோகத்தில் நா.அழகப்பன், தெனாலி ராமன் படங்களில் நாயகனாக நடித்த வடிவேலு தற்போது ‘எலி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக சதா நடிக்கிறார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்கிறார்.

எலி படம் பற்றி யுவராஜ் தயாளன் கூறியதாவது:–

எலி முழு நீளகாமெடி படமாக தயாராகிறது. 1960களில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய கொள்ளை கூட்ட கதையின் சாயலில் இப்படம் இருக்கும். இதில் வடிவேலு போலீஸ் உளவாளியாக வருகிறார். கொள்ளை கூட்டத்தினர் குகைக்குள் அவர் போய் சிக்கி கொள்வது சிரிப்பை வரவழைக்கும்.

சதா கொள்ளை கூட்டத்தில் இருக்கும் ஒரு கிளப் டான்சராக வருகிறார். சதாவிடம் இந்த படத்தின் கதையை சொல்லி நாயகனாக வடிவேலு நடிக்கிறார் என்றேன். அவருக்கு கதை மிகவும் பிடித்துபோனது எனவே நாயகியாக நடிக்க சம்மதித்தார். வடிவேலு கேரக்டர் எலியின் பாடி லேங்க்வேஜல் இருக்கும் இரு சண்டை காட்சிகள் உள்ளன.

கிளப்செட், கொள்ளை கூட்டம் செட் என நிறைய செட்கள் போட்டு படத்தை எடுத்துள்ளோம். படப்பிடிப்பு முடிந்துள்ளது ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது.

வடிவேலு டைரக்டர் பணியில் தலையிடுவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. ஒரு காட்சியை வெவ்வேறு பரிணாமங்களில் நடித்து காட்டி எது வேண்டும் என்று கேட்பார். டைரக்டர்களின் நடிக்கராக வடிவேலு இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த படமாக எலி படம் இருக்கும்.

இவ்வாறு யுவராஜ் தயாளன் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions