
தெனாலிராமன் படத்தை வடிவேலுவை வைத்து இயக்கியவர் யுவராஜ் தயாளன். அந்த படம் தோல்வியடைந்ததால் மீண்டும் அவர்கள் இணைவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆனால், இப்போது எலியில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். முன்பு தவறவிட்ட வெற்றியை இந்த எலி மூலம் ஈட்டி விட வேண்டும் என்று இருவருமே மெனக்கெட்டு வருகிறார்கள்.
அதோடு மட்டுமின்றி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடியதால் அதன்பிறகு ஸ்ரேயாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனால் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகைகளை எலியில் வடிவேலுவுடன் நடிக்க அழைத்தபோது யாரும் பிடிகொடுக்கவில்லை.
இந்த நிலையில், அந்நியன் நாயகியான சதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வடிவேலுவுடன் இணைத்து விட்டார் யுவராஜ். இப்போது சதாவுக்கு பெரிதாக மார்க்கெட் இல்லை என்றபோதும், அந்நியனில் விக்ரமுடன் நடித்த நடிகையுடன் நடிக்கிறோம் என்கிற திருப்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு.
ஆக, எப்படியோ ஒரு முன்னணி நடிகையை வடிவேலுவுக்கு ஜோடியாக்கி விட்டார் யுவராஜ் தயாளன். தற்போது எலி இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில், வடிவேலு நடிக்கும் அடுத்த படத்தையும் இந்த யுவராஜே இயக்குகிறார் என்று தற்போது ஒரு செய்தி பரவியுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவில்லை என்றபோதும், தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிக்க விரும்பும் வடிவேலு, படப்பிடிப்பு தளத்தில் அவ்வப்போது யுவராஜூடன் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கிறாராம். ஆக அப்படி அவர்கள் பேசி வருவது அடுத்த படத்திற்கான கதையாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது.
Post your comment
Related News | |
![]() |