ஜீ தமிழில் வருத்தப்பட வைத்த நிகழ்ச்சி!

Bookmark and Share

ஜீ தமிழில் வருத்தப்பட வைத்த நிகழ்ச்சி!

சின்னத்திரை பொறுத்தவரை நடனம், பாட்டு, காமெடி நிகழ்ச்சிகள் என்றால் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு மதிப்பெண் கொடுப்பதற்காக நடுவர்கள் என்ற பெயரில் நான்கு பேர் அமர்ந்து கொண்டு தங்களது ஜட்ஜ்மென்டுகளை சொல்லி வருகின்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் வரும் கோவை சரளா, ஊர்வசி, ரமேஷ்கண்ணா உள்பட 4 பேர் நடுவர்களாக இருக்கின்றனர். உங்களில் யார் காமெடி கிங் என்று நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் மேடையில் தோன்றி காமெடியாக நடிப்பதற்கு நான்கு பேரும் மதிப்பெண் கொடுத்து வருகின்றனர்.

முதலில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இந்த நிகழ்ச்சிக்காக பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இதைதவிர நடுவர்களுக்கு பெரிய தொகை சன்மானமாக கொடுக்கப்படுவதால் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகமாகி நிகழ்ச்சியை தயாரித்து வழங்கிய நிறுவனத்துக்கு நஷ்டமாகி விட்டதாம்.

அதனால் தற்போது தயாரிப்பு செலவை குறைக்கும் முயற்சியில், ஏவிஎம்மில் போட்டிருந்த செட்டை அங்கிருந்து இடமாற்றி சென்னையிலுள்ள வளசரவாக்கத்தில் சிறிய அளவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

அதோடு, நீதிபதிகளாக இருப்பவர்களுக்கான சம்பளம் பெரிய தொகையாக இருப்பதால், விரைவில் விரலுக்கேற்ற வீக்கமாக வேறு ஆட்களை மாற்றும் ஏற்பாடுகளும் நடப்பதாக சொல்கிறார்கள்.


Post your comment

Related News
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions