அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். ஆனால், இவருக்கெல்லாம் பாஸ் என்றால் ரஜினிகாந்த் தான்.
அவரின் படங்களுக்கு உலகம் முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும், அந்த வகையில் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்திற்கு அண்ணாத்த என்று டைட்டில் வைத்துள்ளனர், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது.
இந்நிலையில் சிவா இதற்கு முன்பு அஜித்துடன் வீரம் ,வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றினார்.
இதில் விஸ்வாசம் சமயத்தில் அஜித்திடம் இந்த அண்ணாத்த கதையை சிவா கூறியதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், அஜித்திற்கு விஸ்வாசம் கதை பிடித்துப்போக அதில் நடித்ததாக கூறப்படுகின்றது.