தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான விஜய்யும், அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து கொண்டிருக்கிறது. ஒருவர் படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு சினிமா விழாவில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது கைகளால் விஸ்வாசம் படக்குழுவுக்கு வழங்கினார். அதையடுத்து அவர் பேசுகையில், அஜித் படங்கள் வெற்றி பெறும்போது அவருக்கு விஜய் வாழ்த்து சொல்வார். அதேபோல் இந்த விஸ்வாசம் படம் வெற்றி பெற்றபோதும் அஜித், டைரக்டர் சிவா ஆகிய இருவருக்கும் விஜய் போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாக ஒரு தகவலையும் வெளியிட்டார்.