Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் கீழே விழுந்த வீடியோ! பலரையும் பதற வைத்த சம்பவம்

ajith in valimai

தல அஜித்தின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது வலிமை படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம். பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக பணியில் ஈடுபட்ட அஜித் எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார்.

இதில் அவர் பாலத்தின் கீழே இருந்த படகில் விழ, பைக் தண்ணீருக்குள் விழுந்ததுள்ளது.அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. சிறு ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதே வேளையில் இந்த வீடியோ உண்மை தானா என பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் அஜித் தரப்பிலிருந்து இப்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை, அதனால், இது உண்மை தானா என்று தோன்ற வைக்கின்றது.

அதே நேரத்தில் அஜித் அடுத்த சில நாட்களிலேயே வலிமை படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என்று தெரிகின்றது.