சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’.
இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்கிறார்கள்.