தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ராட்சசன், ஆடை படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இப்படத்தை அடுத்து `கடாவர்’ என்ற படத்தில் அமலாபால் நடித்து வருகிறார். இதில் அமலா பால், தடய நோயியல் நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளார்கள். அமலாபால் இப்படத்தை தயாரித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் முடிந்து தற்போது அடுத்த கட்டமாக டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.