‘அந்தகாரம்’ என்ற படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீ தயாரிக்கிறார். விக்னராஜன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அந்தகாரம் படத்தை பார்த்த மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: அந்தகாரம் படத்தை பார்க்கும் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு புத்திசாலித்தனமான படைப்பை நான் சமீபத்தில் பார்க்கவில்லை. இயக்குனர் விக்னராஜனின் கதை கூறும் விதத்திற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் மிரட்டியுள்ளனர். அட்லீ, உங்கள் கையில் ஒரு வெற்றி படம் இருக்கிறது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Had the privilege of watching #Andhaghaaram movie..haven’t come across such a brilliant film recently! @vvignarajan bro I’m a fan fa ur writing! Killer performance @iam_arjundas & @vinoth_kishan Congrats @Atlee_dir bro u ve a winner in hand!👌 pic.twitter.com/gn5fIHun6v
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 25, 2020